முதுகுளத்துார் : கீழத்துாவல் பகுதியில் சூறாவளி காற்று மரம் சாய்ந்து மின் கம்பத்தில் விழுந்ததால் மின் கம்பம் முறிந்தது. 5 கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கோடை வெயில் வாட்டி வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் குறைந்து காற்று அதிகம் வீசியதோடு அவ்வப்போது மழை பெய்தது.முதுகுளத்துார்-பரமக்குடி செல்லும் சாலை கீழத்துாவல் கிராமத்தின் அருகே சூறாவளி காற்றில் மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பத்தின் மீது விழுந்து முறிந்தது. இந்த மின் கம்பத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் 5 கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது
.இதுகுறித்து மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள் காற்றில் சாய்துள்ள மரத்தை அகற்றி புதியமின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.