| அரசு பஸ்--ஆம்புலன்ஸ் மோதல் Dinamalar
அரசு பஸ்--ஆம்புலன்ஸ் மோதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:48

பல்லடம் : பல்லடம் அருகே, அரசு பஸ்-, தனியார் ஆம்புலன்ஸ், நேருக்கு நேர் மோதியதில், ஆம்புலன்ஸ் டிரைவர் படுகாயமடைந்தார்.கோவை சிங்காநல்லுாரை சேர்ந்தவர் முனீஸ்வரன், 27; ஆம்புலன்ஸ் டிரைவர். நேற்று, கோவையில் இருந்து, பல்லடம் வந்துவிட்டு, மீண்டும் ஆம்புலன்சில் கோவை திரும்பி கொண்டிருந்தார்.பல்லடம் என்.எச்.ரோடு காளப்பட்டி பிரிவு அருகே, திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ்சும், ஆம்புலன்சும் மோதின. விபத்தில், ஆம்புலன்சின் முன்பகுதி நொறுங்கியது. டிரைவர் முனீஸ்வரன் கால் முறிந்தது. மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம், அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X