| அம்மா 'வை - பை' சேவை திருப்பூருக்கு எப்போது? Dinamalar
அம்மா 'வை - பை' சேவை திருப்பூருக்கு எப்போது?
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:50

திருப்பூர் : 'சென்னை, கோவையை போன்று திருப்பூரிலும், அம்மா 'வை-பை' சேவை கொண்டுவர வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



மறைந்த முதல்வர் ஜெ.,வின் கனவு திட்டங்களில் ஒன்றான, அம்மா 'வை-பை' என்ற கம்பியில்லா இணையதள வசதி, முதல் கட்டமாக, மாநிலத்தின், 50 இடங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் மூலம் கோவை, சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து இடங்களில் அம்மா 'வை-பை' சேவை துவங்கப்பட்டுஉள்ளது.



முதல், 20 நிமிடம் இச்சேவையை இலவசமாக பயன்படுத்தலாம். அதன்பின், ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு, 20 ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படும். முதல் 2 மணி நேரம் பயன்படுத்திய பின், மீண்டும் 'லாக் இன்' செய்து கொள்ள வேண்டும்.



ஆண்டுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி ஈட்டித்தரும், தொழில் நகரான திருப்பூரிலும் இச்சேவையை கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திருப்பூர், பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் உட்பட மக்கள், தொழிலாளர்கள் அதிகம் கூடும் இடங்களில் இச்சேவையை அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X