சுழற்கோப்பை கிரிக்கெட் அவெஞ்சர்ஸ் அசத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:51

திருப்பூர்: ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான முதல் சுற்று லீக் போட்டியில், பெருமாநல்லுார் கிரிக்கெட் கிளப், ராயல் மற்றும் அவெஞ்சர்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டி நடந்து வருகிறது. பல்லடம் அம்பாள் புரபஷனல் கல்லுாரியில் நடந்த போட்டியில், பெருமாநல்லுார் கிரிக்கெட் கிளப் - பெஸ்ட் சுவிங் அகாடமி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெருமாநல்லுார் அணி, 25 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு, 148 ரன் எடுத்தது. அடுத்து பேட் செய்த பெஸ்ட் அணி, 25 ஓவர் முடிவில், 102 ரன்களுக்கு 'ஆல் - அவுட்'டானது. 46 ரன் வித்தியாசத்தில் பெருமாநல்லுார் கிரிக்கெட் கிளப் வெற்றி பெற்றது.பல்லடம் ஸ்கேடு கல்லுாரியில் நடந்த மற்றொரு லீக் போட்டியில், ஸ்டார் லயன்ஸ் கிரிக்கெட் கிளப் - லஸ்ட் ஆப் ராயல் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த, ஸ்டார் லயன்ஸ் அணி, 20 ஓவரில், 68 ரன் மட்டுமே எடுத்தது; எளிய இலக்கை விரட்டிய ராயல் அணி, 16 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 71 ரன் எடுத்து வெற்றி பெற்றது.மூன்றாவது லீக் போட்டியில், திருப்பூர் சூப்பர் கிங்ஸ் - அவெஞ்சர்ஸ் அணிகள் மோதின. 22.4 ஓவர் நிறைவில், சூப்பர் கிங்ஸ் அணி, 84 ரன்கள் எடுத்தது. 20 ஓவருக்கு ஐந்து பந்துகள் மீதமிருந்த நிலையில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 85 ரன் எடுத்து அவெஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X