| ஓட்டு எண்ணும் பணியில் வங்கியாளர்; நுண்பார்வையாளராக செயல்படுவர் Dinamalar
ஓட்டு எண்ணும் பணியில் வங்கியாளர்; நுண்பார்வையாளராக செயல்படுவர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:52

திருப்பூர் : திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை பணியில், வங்கியாளர்கள், 126 பேர் ஈடுபட உள்ளனர்.



நாடு முழுக்க, ஏழு கட்டமாக நடந்த லோக்சபா தேர்தல், நேற்றுடன் நிறைவு பெற்றது; வரும், 23ல், ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நடைபெற உள்ளது.ஓட்டு எண்ணிக்கையில், அரசு அதிகாரிகளுடன், வங்கியாளர்களும் இணைந்து பணிபுரிய உள்ளனர். மாவட்டம் முழுக்க உள்ள பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும், மேலாளர், உதவி பொது மேலாளர், கேஷியர், கிளர்க் நிலையிலான அதிகாரிகள், 126 பேர் தயாராக உள்ளனர்; இவர்கள், ஓட்டு எண்ணிக்கை மையத்தில், நுண்பார்வையாளர்களாக பணியாற்ற உள்ளனர்.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (கனரா வங்கி) சுந்தரமூர்த்தி கூறியதாவது;ஓட்டு எண்ணிக்கை மையத்தில், வங்கியாளர்கள், 126 பேர், நுண்பார்வையாளராக பணிபுரிய உள்ளனர். அவிநாசி, பல்லடம், உடுமலை பகுதிகளைவிட, அருகாமையை கருத்தில் கொண்டு, திருப்பூர் நகர் பகுதி வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள் இப்பணியில் அதிகளவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஓட்டு எண்ணிக்கை மையத்தில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளவேண்டும் என, அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் வங்கியாளர்களுக்கு, நாளை மறுநாள் (நாளை), அடையாள அட்டை வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X