சென்னை:கிண்டி, பாம்பு பண்ணையில், எட்டு குஞ்சுகள் பொரித்த, அமெரிக்க மலை ஓணானை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
சென்னை, கிண்டி சிறுவர் பூங்கா வளாகத்தில் உள்ள, பாம்பு பண்ணையில், பாம்பு, முதலை, ஆமை, பச்சோந்தி, ஓணான் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் உள்ளன.சில நாட்களுக்குமுன், ஒரு தெற்காசியா மலைபாம்பு, 45 முட்டைகள் போட்டது. இரண்டு மாதத்தில், குஞ்சு பொரிக்க உள்ளது.இங்கு, 2 வயதுள்ள, ஆண், பெண் என, இரண்டு அமெரிக்க மலை ஓணான்கள் உள்ளன. இவை, கேரட், கோஸ், கீரை வகை உள்ளிட்ட காய்கறிகளை உண்ணும். இரண்டு மாதத்திற்குமுன், பெண் ஓணான், 20 முட்டைகள் போட்டது.நேற்று முன்தினம், நல்ல நிலையில் இருந்த, எட்டு முட்டையில் இருந்து, ஓணான் குஞ்சுகள் பொரித்தது.அவை, தனி கூண்டில் வைத்து பராமரிக்கப்படுகிறது. எட்டு ஓணான் குஞ்சுகளையும், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.