கீழ்ப்பாக்கம்"
நியூ ஆவடி சாலையில், 3 கோடி ரூபாய் செலவில், 1.2 கி.மீ., நீளத்திற்கு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது.சென்னையில், 2015ல் பெய்த கனமழையின் போது, கீழ்ப்பாக்கம், நியூ ஆவடி சாலையில், தேங்கிய மழைநீர் வடிய, ஒரு வாரத்திற்கு மேலானது.அப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்காதது தான் காரணம் என, ஆய்வில் தெரிய வந்தது. அதை தொடர்ந்து, 3 கோடி ரூபாய் செலவில், 1.2 கி.மீ., நீளத்திற்கு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை, தற்போது, மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.