| 'ஒரு லட்சம் ரூபாய் அபராதம்' Dinamalar
'ஒரு லட்சம் ரூபாய் அபராதம்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:55

அவிநாசி : 'பலமுறை எச்சரிக்கைக்கு பின்பும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பை விற்பனை செய்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மாநில அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, தட்டு, டம்ளர் உட்பட பொருட்களின் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல், மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது.நேற்று முன்தினம், மாவட்டம் முழுக்க, உள்ளாட்சி அமைப்பினர் அதிரடியாக பிளாஸ்டிக் ரெய்டு நடத்தி கடைகளில் இருந்து, கிலோ கணக்கில் பிளாஸ்டிக் வகையறாக்களை பறிமுதல் செய்தனர்.



அவிநாசி பேரூராட்சி சார்பில், செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி தலைமையிலான குழுவினர், சேவூர் ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.மொத்த விற்பனையாளர்கள் மற்றும் கடைகளில் இருந்து, 210 கிலோ பிளாஸ்டிக் பை, டம்ளர், தட்டு உட்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 21 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.



அதிகாரிகள் கூறியதாவது:அவ்வப்போது பிளாஸ்டிக் ரெய்டு நடத்தி பறிமுதல் செய்வதும், சிறியளவில் அபராதம் விதிப்பதும், மீண்டும் வியாபாரிகள், அவற்றை பயன்படுத்துவதும் தொடர் கதையாகவே உள்ளது; இந்நடவடிக்கைக்கு வியாபாரிகள் அசருவதில்லை.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோர்க்கு, அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ள நிலையில், மீண்டும், மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதை தவிர வேறு வழியில்லை; அத்துடன் அவர்களது கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



இருப்பினும், லட்சம் ரூபாய் அபராதம் என்பது, வெறும் அச்சுறுத்தலுக்கான எச்சரிக்கையாக மட்டுமே உள்ளாட்சி அமைப்பினர் கையாண்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும், அபராத நடவடிக்கையில் மென்மையான போக்கையே கடைபிடித்து வருகிறது.எனவே, அபராதம் விதிப்பதில் தயவு பார்ப்பதை உள்ளாட்சி நிர்வாகங்கள் தவிர்த்தால் மட்டுமே, பிளாஸ்டிக் தடை, கட்டுக்குள் வரும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X