| வருமானம் கொடுக்காத வாழை; நிலக்கடலைக்கு திரும்பும் விவசாயிகள் Dinamalar
வருமானம் கொடுக்காத வாழை; நிலக்கடலைக்கு திரும்பும் விவசாயிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:55

அவிநாசி : வாழை சாகுபடி கைக்கொடுக்காததால், மீண்டும் நிலக்கடலை சாகுபடிக்கு விவசாயிகள் மாறத்துவங்கியுள்ளனர்.



அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட புஞ்சை தாமரைக்குளம், சேவூர், குட்டகம், ஆலத்துார், தத்தனுார், புலிப்பார், நடுவச்சேரி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்பதால், தண்ணீர் தேவை குறைந்த, மானாவாரி பயிரான நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம்.



கடந்தாண்டு கூடுதலாக மழை பெய்ததால், விவசாயிகள் நேந்திரன் வாழை விவசாயத்துக்கு மாறினர்; ஆனால், வாழைக்கு சந்தையில் போதிய விலையில்லை. அத்துடன், இந்தாண்டின் துவக்கம் முதல் மழைப்பொழிவும் குறைவாக இருக்கிறது; வாழை சாகுபடிக்கு, ஆண்டு முழுக்க தண்ணீர் அவசியம் என்ற நிலையில், மழை கைக்கொடுக்குமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.



எனவே, வாழை விவசாயத்தை கைவிட்டு, தண்ணீர் தேவை குறைவாக தேவைப்படும் நிலக்கடலை சாகுபடிக்கு மாற, விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விவசாய நிலத்தை உழவு செய்து, சாகுபடிக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். இதனால், 'கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு, நிலக்கடலை சாகுபடி பரப்பு அதிகரிக்கும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X