திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், தீவிர வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு முகாம் வரும், 28ம் தேதி துவங்குகிறது.
குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதம் வரை, கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்; இதை பின்பற்றாததாலும், குழந்தை வளர்ப்பில் சுகாதாரமான முறைகளை கடைபிடிக்காததாலும், குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கின்றன. பல நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது என, சுகாதாரத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.இதை தவிர்க்க, சுகாதாரத்துறையினர் சார்பில், தீவிர வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படுகிறது.நடப்பாண்டைய முகாம், வரும், 28ம் தேதி துவங்கு கிறது. தொடர்ந்து, இரு வாரங்களுக்கு, வீடுகள் தோறும் நேரடியாக செல்லும் சுகாதாரத் துறையினர், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உப்புக்கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரை வழங்கவுள்ளனர்.மேலும், அங்கன்வாடி மையம், துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் துத்தநாக மாத்திரை வழங்கப்படவுள்ளது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு, சிசு மற்றும் சிறு குழந்தைகளுக்கு கூடுதல் உணவு வழங்கும் முறை குறித்தும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:டாக்டர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி நேர சுகாதார செவிலியர்கள் மற்றும் குழந்தைகள் நல மைய அமைப்பாளர்கள் களப்பணி மூலம், ஒவ்வொரு பகுதியிலும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கணக்கெடுத்துள்ளனர். இவர்கள், வீடு வீடாக சென்று, வயிற்றுப்போக்கு பாதிப்பு குறித்தும், அது ஏற்படுவதன் காரணம் குறித்தும் விளக்கமளிப்பர். மேலும், உப்புக்கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரை வழங்குவர். தன் சுத்தம் பேணும் வகையில், கை கழுவும் முறை குறித்தும் விளக்குவர். இவர்களுக்கு, பெற்றோர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, சுகாதாரத்துறையினர் கூறினர்.கோட்''''