| அடையாறில் படகு பந்தயம் Dinamalar
அடையாறில் படகு பந்தயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:59

சென்னை:படகு பந்தயத்தின், 'எட்டு' பிரிவில், மெட்ராஸ் போட் கிளப் அணி, வெற்றி பெற்றது.அடையாறு ஆற்றை துாய்மையாக வைக்க வேண்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, காவேரி மருத்துவமனை மற்றும் மெட்ராஸ் போட் கிளப் சார்பில், நேற்று முன்தினம், படகு போட்டிகள் நடந்தன.



இதன் ஒரு பிரிவில், அடையாறு பகுதியில், 'ஹெட் ஆப் தி அடையாறு' எனும் பெயரில், சிறப்பு போட்டிகள் நடந்தன.இதில், ஜிம்கானா, காஸ்மோபோலிடன், மெட்ராஸ் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு கிளப்புகளைச் சேர்ந்த, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, 100க்கும் மேற்பட்டோர், திறமையை வெளிப்படுத்தினர்.அடையாறு, ஆற்றின் புரோக்கன் பிரிட்ஜ் முகத்துவார பகுதி, துவக்கப் புள்ளியாகவும், மெட்ராஸ் போட் கிளப், நிறைவு பகுதியாகவும், மொத்தம், 3.5 கி.மீ., துாரம், இலக்காக நிர்ணயிக்கப் பட்டது.



இந்த போட்டியில், மொத்தம், 32 படகுகளில், தனிநபர், இரட்டையர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், போட்டிகள் நடந்தன.இதில், முக்கிய போட்டியான, 'படகு எட்டு' எனும் பிரிவில், மெட்ராஸ் போட் கிளப் மற்றும் இதர கிளப் அணிகள் பங்கேற்றன.இந்த போட்டியில், மெட்ராஸ் போட் கிளப் அணி, மொத்த துாரத்தை, 14 நிமிடம், 17 வினாடிகளில் கடந்து, 3 வினாடிகள், வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X