மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்; கட்டுப்படுத்த வேளாண்துறை அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:01

நெகமம் : கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், மக்காச்சோளம் அதிக பரப்பளவில் சாகுபடியாகிறது. கடந்த ஆண்டு முதல், மக்காச்சோளம், நெல், கரும்பு உள்பட, 80 வகையான பயிர்களில் படைப்புழுவின் தாக்குதல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.



இதனை தொடர்ந்து, வேளாண்துறையினர் படைப்புழுவை அழிக்க, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். படைப்புழுவின் தாய் அந்து பூச்சிகள், 100 - 450 கி.மீ., துாரம் பறக்கும் திறனுள்ளதால், பாதிப்பு அதிகம் இருக்கும். சுல்தான்பேட்டை சுற்றுபகுதியில், மக்காச்சோளம் கூடுதல் பரப்பளவில் சாகுபடியாவதால், பயிர் மேலாண்மை நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது. மே, ஜூன் மாதங்களில் கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். உழவு மேற்கொள்ளும் போது, ஏக்கருக்கு, 250 கிலோ வேப்பம்புண்ணாக்கு அடியுரமாக இடலாம். தழைச்சத்து அதிகம் இடுவதை தவிர்க்கலாம்.காலம் கடந்து, பயிர் செய்வதை தவிர்த்து, அதிக பாதிப்பை தடுக்கலாம். மழையை உபயோகித்து மக்காச்சோளம் நடுவது படைப்புழுவின் பாதிப்பை குறைக்கலாம்.மக்காச்சோளம் விதைப்பின்போது, வயல் ஓரங்களில் தட்டைப்பயிறு, ஆமணக்கு, சூரியகாந்தி, சாமந்திப்பூ ஆகியவற்றை விதைப்பதால், பூச்சி தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வரலாம். எனவே, ஊடுபயிர் மற்றும் வயல் ஓர சாகுபடியை மேற்கொள்ள வேண்டும்.பயிர் முளைத்த, ஒரு வார இைடவெளியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, இலையின் மேற்பகுதி அல்லது அடிப்பகுதியில் காணப்படும் முட்டை குவியல் மற்றும் இளம்புழு கூட்டங்களை அழிக்க வேண்டும்.தவிர, இனக்கவர்ச்சி பொறி வைத்தும், களைகள் இல்லாமலும் மேலாண்மை செய்ய வேண்டும். மேலும், இரண்டு சதவீத வேப்ப எண்ணெய் மற்றும் இரண்டு சதவீத வேப்பங்கொட்டை கரைசலையும் தெளித்து இயற்கை முறையில், புழுக்களை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு, வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X