| மின்கம்பத்தில் ஊசலாடும் தெருவிளக்கு 'சுவிட்ச்' பெட்டி Dinamalar
மின்கம்பத்தில் ஊசலாடும் தெருவிளக்கு 'சுவிட்ச்' பெட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:02

பொள்ளாச்சி : கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ரயில்வே கேட் அருகே, மின்கம்பத்தில் ஊசலாடும் 'சுவிட்ச்' பெட்டியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.



கிணத்துக்கடவு அடுத்த, சொலவம்பாளையத்தில் இருந்து, ரயில்வே கேட் அருகில் உள்ள, ஆழ்குழாய் கிணறு நீரேற்றும் மையம் வரை, தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தெருவிளக்குகளை இயக்கும் 'சுவிட்ச்' பெட்டி, கம்பங்களில் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன், ரோடு அகலப்படுத்தும் பணி துவங்கியது. அப்போது, மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த, 'சுவிட்ச்' பெட்டி கழன்று தொங்கியது. ஊராட்சி நிர்வாகமும், மின்வாரியமும் கண்டு கொள்ளாததால், கம்பத்தில் ஊசலாடுகிறது.



இப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், பள்ளி விடுமுறையில் விளையாடும் சிறுவர்கள், இந்த பெட்டியை தொட்டால் ஆபத்தில் முடியும் என மக்கள் எச்சரித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பின்றி திறந்த நிலையில், ஊசலாடும் பெட்டியை மின்கம்பத்தில் பொருத்த வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X