| சிதலமடைந்த கூடம்: சீரமைக்க எதிர்பார்ப்பு Dinamalar
சிதலமடைந்த கூடம்: சீரமைக்க எதிர்பார்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:06

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொக்கனுாரில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் பயன்பாடு இன்றி சிதலமடைந்து காணப்படுகிறது.



கிணத்துக்கடவு அடுத்துள்ள சொக்கனுாரில், கடந்த 2001 - 02ம் ஆண்டில், எம்.பி., நிதி ஓதுக்கீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.இதனை தொடர்ந்து, 2003 - 04ம் ஆண்டு கூடுதல் சமுதாய நலக்கூடமும் கட்டப்பட்டது. இதில், இப்பகுதி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திருமணம் மற்றும் சங்க கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. சமுதாய நலக்கூடத்துக்கு ரோடு வசதியில்லாததால், இப்பகுதியை பொது கழிப்பிடமாக பயன்படுத்தியதால், சமுதாய நலக்கூடத்தில் விசேஷங்கள் நடப்பதில்லை. இதனால், இக்கட்டடம் பராமரிக்கவில்லை. இதனை 'குடிமகன்'கள், சமூக விரோதிகளும் பாழ்படுத்தி வந்தனர். இதனை தடுக்க, 'கேட்' பூட்டப்பட்டு, முட்செடிகள் வைக்கப்பட்டது. இதன் பின், 'குடிமகன்'கள் தொந்தரவு குறைந்துள்ளது.



சமுதாய நலக்கூடம் பூட்டப்பட்டதால், இப்பகுதி பொதுமக்கள், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோவை போன்ற பகுதிகளில் விேஷச நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, அதிகளவில் வாடகை கொடுத்து சிரமப்படுகின்றனர்.அதனால், சிதலமடைந்த சமுதாய நலக்கூடத்தை புதுப்பிக்க சொக்கனுார் ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X