குடிநீருக்காக அல்லல்படும் ஆலம்பச்சேரி மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:09

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள ஆலம்பச்சேரியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அடுத்த ஊருக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் அவல நிலையால் அல்லல்பட்டு வருகின்றனர்.மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பச்சேரியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஊரில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் போர்வெல் அமைக்கப்பட்டு ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.



கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததாலும், வைகையில் தண்ணீர் வராததாலும்,போர்வெல் குறைந்த ஆழத்திற்கே போடப்பட்டதாலும் 4க்கும் மேற்பட்ட போர்வெல்கள் துார்ந்து போனதால் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் வராமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.தற்போது ஊருக்குள் உள்ள குடிநீர் தொட்டியில் மட்டும் குறைந்த நேரமே சொட்டு,சொட்டாக வடிகின்ற நீரை கிராம மக்கள் காத்திருந்து பிடித்து வருகின்றனர். பெரும்பாலான கிராம மக்கள் அருகே உள்ள மேலநெட்டூர் கிராமத்திற்கு சென்று அங்கு கிடைக்கும் குடிநீரை வண்டிகளில் பிடித்து வருகின்றனர்.



ஆலம்பச்சேரி கிராம பெண்கள் கூறியதாவது: ஆலம்பச்சேரியில் தற்போது ஒரே ஒரு குடிநீர் தொட்டியில் மட்டும் குறைந்த அளவு தண்ணீரே வருகிறது. அதனையும் இரவு நேரங்களில் காத்திருந்தால் தான் பிடிக்க முடியும்.இதனால் மற்ற வேலைகளுக்கு செல்ல முடியவில்லை.தற்போது ஒவ்வொருவர் வீட்டிலும் ரூ.5 ஆயிரம் செலவழித்து தண்ணீர் குடங்களை கொண்டு செல்லும் வண்டிகளை வாங்கி அருகில் உள்ள மேலநெட்டூர் கிராமத்திற்கு சென்று தண்ணீரை பிடித்து வருகிறோம், என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X