| சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு; சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை 'அட்வைஸ்' Dinamalar
சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு; சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை 'அட்வைஸ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:09

வால்பாறை : வனவிலங்குகள் நடமாடும் பகுதி வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும் அரிய வகை வனவிலங்குகளான வரையாடு, சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறையின் இயற்கையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.



இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள புதுத்தோட்டம் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் உள்ளன. இந்த வகை குரங்குகள் சிங்கத்தின் மூகச் சாயலில் உள்ளதால், சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களை கண்டால் ஓடிவிடும்.மிகவும் கூச்ச சுபாவமுடைய இந்த வகை குரங்குகள் வனத்தில் கிடைக்கும் பழங்கள், பழக்கொட்டைகளை உணவாக உட்கொள்கின்றன.



சிங்கவால் குரங்குகள் ரோட்டில் துள்ளி விளையாடும் போது, விபத்தில் சிக்கி இறக்காமல் இருக்க வனத்துறை மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் ஐந்து இடங்களில் ஊஞ்சல் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான சிங்கவால் குரங்குகள் ரோட்டில் தான் துள்ளி விளையாடுகின்றன.



வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை மலைப்பகுதியில் புதுத்தோட்டம், குரங்குமுடி, சின்கோனா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. அரிய வகை வனவிலங்குகளில் ஒன்றான இவ்வகை குரங்குகளுக்கு தேவையான உணவு, வனப்பகுதியில் தாராளமாக கிடைக்கிறது.



தற்போது பலாப்பழம் சீசன் என்பதால், அவைகளுக்கு தேவையான உணவு வனப்பகுதியிலேயே அதிக அளவில் கிடைக்கிறது. ஆனால், பகல் நேரத்தில் இந்த குரங்குகள் ரோட்டில் துள்ளி விளையாடுகின்றன. இதனால், சில நேரங்களில் வாகனத்தில் அடிபட்டு அவைகள் உயிரிழக்கின்றன.எனவே, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள், தங்களது வாகனங்களை சிங்கவால் குரங்குகள், வரையாடுகள் நடமாடும் பகுதியில் மிதவேகமாக இயக்க வேண்டும்.மீறினால் வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X