| குண்டும் குழியுமான மேலநெட்டூர் ரோடு Dinamalar
குண்டும் குழியுமான மேலநெட்டூர் ரோடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:10

மானாமதுரை : மானாமதுரையிலிருந்து காக்குடி வழியாக மேலநெட்டூர் செல்லும் ரோடு மிகவும் மோசமான நிலையில் ஆங்காங்கே குண்டும்,குழியுமாக காணப்படுவதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


மானாமதுரை-பரமக்குடி ரோட்டில் நல்லாண்டிபுரம் அருகே காக்குடியிலிருந்து மேலநெட்டூர் செல்லும் ரோடு போடப்பட்டு சில வருடங்களே ஆன நிலையில் தற்போது ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது,மேலும் பல இடங்களில் பெரிய, பெரிய பள்ளங்கள் காணப்படுவதால் வாகனங்கள் அதில் ஏறி இறங்கும் போது வாகனத்தில் இருப்பவர்களுக்கு சில நேரம் காயம் ஏற்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் இரவில் அந்த வழியாக டூவீலர் மற்றும் சைக்கிள்களில் செல்பவர்கள் பள்ளங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர்.



இந்த பள்ளங்களினால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக காக்குடி வழியாக மேலநெட்டூர் செல்லும் ரோட்டில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X