| காலியாகுது நாட்டார் கால்வாய்நடவடிக்கை எடுக்க கோரிக்கை Dinamalar
காலியாகுது நாட்டார் கால்வாய்நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:12

இளையான்குடி : இளையான்குடியில் உள்ள நாட்டார் கால்வாயில்நடக்கும் மணல் திருட்டால், நீர்வளம் பாதிக்கப்படுவதோடு, கால்வாயும் அழிந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இளையான்குடி அருகே உள்ள மேலத்துறையூர்,செந்தமிழ்நகர், மாதவன் நகர் உள்ளிட்ட பகுதிகளை ஒட்டி நாட்டார்கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் எல்லை பிரித்து சிலர், மாட்டுவண்டிகள், டிராக்டர், டிப்பர் லாரிகள் என வசதிக்குஏற்றவாறு மணல் அள்ளுகின்றனர்.


கருவேல மரங்கள் நிறைந்த நீண்ட நாட்டார் கால்வாய்க்கு,போலீசார் செல்லும் முன்பே மணல் கடத்தல்காரர்களுக்கு தகவல் கிடைத்து தப்பி விடுகின்றனர். ஆனாலும், போலீசார் அவ்வப்போதுமாட்டுவண்டிகளை பிடித்து வழக்கு பதிவு செய்தாலும் சிலநாட்களிலேயே மணல் திருட்டு மீண்டும் தொடர்கிறது.தவிர,போலீசாரிடம் மாட்டிவிட்டதாக கூறி மணல் திருட்டுகும்பல்களுக்குள்ளேயே தகராறும் எழுகிறது. எனவே, மணல் கடத்தலை தடுத்து இப்பகுதியின் நீர்வளஆதாரத்தை காக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும், என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X