தேவகோட்டை, : தேவகோட்டைக்கு தேர்தல் பிரசாரத்திற்காக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கடந்த ஏப். 8 ல் வந்தார்.
தியாகிகள் பூங்கா அருகே நடந்த அரை மணி நேர வேன் பிரசாரத்திற்காக அந்தபகுதியிலுள்ள அனைத்து ரோடுகள், முக்கிய சந்திப்புக்களில் வேகத்தடுப்புகளை வைத்து போலீசார் மறித்தனர். அதற்காக பல பகுதிகளிலிருந்தும் வேகத்தடுப்புக்களாக உள்ள தடுப்பு கம்பிகளை கொண்டு வந்தனர். பயன்படுத்தப்பட்ட விளம்பர தடுப்புகளை ஓரளவு போலீசார் எடுத்து சென்றுவிட்டனர். சில தடுப்புகள் தியாகிகள் பூங்கா அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 40 நாட்களாகியும் தடுப்பை எடுத்துச் செல்லாமல் உள்ளனர்.
லேசாக காற்றடித்தாலும் கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. இந்த தடுப்பு கம்பியை மாற்றி வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.