| காட்சிப்பொருளான சமுதாயக்கூடம் பராமரிக்க மக்கள் கோரிக்கை Dinamalar
காட்சிப்பொருளான சமுதாயக்கூடம் பராமரிக்க மக்கள் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:14

ஆனைமலை : ஆனைமலை அடுத்த ஒடையகுளம் சமுதாய நலக்கூடத்தை, பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது.



ஆனைமலை அடுத்த ஒடையகுளம் மதுரைவீரன் கோவில் அருகே, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2008ல் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. மின் விளக்கு, மின் விசிறி, கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.அதேபோல், மின்சாரம் தடைபடும் போது சுப நிகழ்ச்சியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, 'சோலார்' மின் வசதி ஏற்படுத்தப்பட்டன. பெரும்பாலான மக்கள் காதணி விழா, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை குறைந்த வாடகை செலுத்தி நடத்தினர்.இந்நிலையில், சமுதாய நலக்கூடத்தை பேரூராட்சி அதிகாரிகள், பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தனியார் மண்டபங்களில் அதிக வாடகை செலுத்தி, நிகழ்ச்சிகள் நடத்தி சிரமப்படுகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், இரண்டு ஆண்டுகளாக காட்சிப்பொருளாக உள்ளது.தற்போது, 'குடிமகன்'கள் சமுதாய நலக்கூடத்தை 'பார்' ஆக பயன்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் உள்ளே நுழைந்து, மின் விசிறி, மின் விளக்குகளை சேதப்படுத்துகின்றனர். சமுதாய நலக்கூடத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாகும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X