வறண்டு வரும் புழல், பூண்டி ஏரிகள்: களைகட்டுகிறது மீன்பிடி தொழில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:14

வேகமாக வறண்டு வரும் சென்னை குடிநீர் ஏரிகளில், மீன்பிடி தொழில் களைகட்டி வருகிறது.



திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், 2018ல், இந்த ஏரிகளுக்கு போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை.தொடர்ந்து குடிநீர் எடுத்ததால், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டுவிட்டன.வினியோகம்பூண்டி, புழல் ஏரிகள், ஆங்காங்கே தீவுகள் போல தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இரண்டு ஏரிகளிலும் சேர்த்து, 0.15 டி.எம்.சி., நீர் மட்டுமே எஞ்சியுள்ளது. இவற்றில், திடக்கழிவுகளும் அதிகஅளவில் கலந்துள்ளன.இவற்றை, ராட்சத மோட்டார்கள் வாயிலாக உறிஞ்சி எடுத்து, சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.தண்ணீர் வற்றிவருவதால், இரண்டு ஏரிகளிலும் மீன்பிடி தொழில் களைகட்டி வருகிறது.



விற்பனை



உள்ளூர் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், மரத்தில் சிறிய கட்டுமரங்களை உருவாக்கி, வலை போட்டு மீன்பிடித்து வருகின்றனர். முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கிய பகுதிகளில், கால்களால் மிதித்தும் மீன்களை பிடிக்கின்றனர். கெண்டை, ஜிலேபி, பைலட் உள்ளிட்டவை, அதிகளவில் சிக்கி வருகிறது.இந்த மீன்கள், செங்குன்றம், பாடியநல்லுார் மட்டுமின்றி, சென்னை நகரில் உள்ள பல்வேறு மார்க்கெட்களுக்கு உயிருடன் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X