| தண்ணீரின்றி தவிக்கும் காரைக்குளம் ஊராட்சி Dinamalar
தண்ணீரின்றி தவிக்கும் காரைக்குளம் ஊராட்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:16

இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள காரைக்குளம் ஊராட்சியில்தண்ணீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.



காரைக்குளம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்டகுடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை போக்க,காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமும், தாயமங்கலம் குடிநீர்திட்டத்தின் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தாயமங்கலம் குடிநீர் இப்பகுதிக்கு வந்தே பல மாதங்கள் ஆவதாகவும், காவிரிக் குடிநீர் 4 நாட்களுக்கு ஒருமுறையே வருவதாகவும், வந்தாலும் அனைவருக்கும் போதுமானஅளவு தண்ணீர் கிடைப்பதில்லை எனவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.காரைக்குளம், சாரனேந்தல் பகுதி மக்கள் குடிநீருக்காகபலமைல் துாரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.



சாரனேந்தல் அல்போன்ஸ் கூறியதாவது: காவிரிக் குடிநீர் 4 நாட்களுக்கு ஒருமுறை தான்வருகிறது. அதுவும் போதுமானதாக இல்லை. தாயமங்கலம்கூட்டுக்குடிநீர் திட்டமும் வீணாகி விட்டது. தண்ணீரை தேடி மக்கள்பலமைல் துாரம் அலைகின்றனர், என்றார்.காரைக்குளம் லட்சுமி கூறியதாவது: கடந்த பல மாதங்களாக காவிரி குடிநீர் பற்றாக்குறையால்மக்கள் தவித்து வருகின்றனர். போர்வெல் தண்ணீர் மூலம்சமாளிக்கலாம் என்றால், அதுவும் போதுமானதாக இல்லை.அனைத்து கிராமத்திலும் குளியல் தொட்டி உள்ளது. அதில் வரும்தண்ணீரை பிடித்து இதர தேவைக்கு மக்கள் பயன்படுத்துகின்றனர்.எங்கள் கிராமத்தில், குளியல் தொட்டி வைக்க பல ஆண்டுகளாகமுறையிட்டும் அதுவும் நடக்கவில்லை. என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X