| சுகாதார நிலையத்தில் ரத்த அழுத்த தினம் Dinamalar
சுகாதார நிலையத்தில் ரத்த அழுத்த தினம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:17

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகேயுள்ள நல்லட்டிபாளையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக இரத்த அழுத்த தினம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தலைமை வகித்தார். தொற்று நோய் பிரிவு அலுவலர் டாக்டர் விஜயகுமார் பங்கேற்றார். விழாவில், 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் பாதிப்பு தாக்கம் இருப்பதை கண்டறிந்து மருத்து சிகிச்சை பெறுவதற்காக, பரிசோதனை மையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இம்மையத்தில், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, புற்றுநோய் பாதிப்பு போன்றவற்றிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வருவதற்கு, தவறான உணவு பழக்கம்தான் காரணம். இதனை தடுக்க முறையான உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்ய வேண்டும். அரிசி சாப்பாட்டுக்கு பதிலாக சிறுதானிய உணவு சாப்பிட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X