| வால்பாறையில் பராமரிப்பில்லாத மின்வேலி; புதுப்பிக்க வலியுறுத்தும் தொழிலாளர்கள் Dinamalar
வால்பாறையில் பராமரிப்பில்லாத மின்வேலி; புதுப்பிக்க வலியுறுத்தும் தொழிலாளர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:18

வால்பாறை : தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியை பராமரிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களிலும் காட்டுயானை, கரடி, சிறுத்தை, புலி, காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. வால்பாறையில், சமீப காலமாக வனவிலங்கு - மனித மோதல் அதிகமாக காணப்படுகிறது.குறிப்பாக, யானை, புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி போன்ற வனவிலங்குகள் தாக்கி, 10 ஆண்டுகளில், 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். வனவிலங்கு -- மனித மோதலை தவிர்க்க, வனத்துறை சார்பில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் மின்வேலி அமைக்கப்பட்டது.கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்வேலி, தற்போது பராமரிப்பின்றி உள்ளது. இதனால் வனவிலங்குகள் மீண்டும் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்யத்துவங்கியுள்ளன.



தொழிலாளர்கள் கூறியதாவது:வனவிலங்குகளின் வசிக்கும் இடத்தில், உயிரை பணயம் வைத்து தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை.குடியிருப்பு பகுதியில் சிறுத்தை, யானை போன்ற வனவிலங்குகள் நுழையாமல் தடுக்க வனத்துறை சார்பில் மின்வேலி அமைக்கப்பட்டது.ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததால் காட்சிப்பொருளாக உள்ளது. மீண்டும் மனித -- வனவிலங்கு மோதல் ஏற்படாமல் தடுக்க மின்வேலியை வனத்துறை சார்பில் பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X