அக்கறை தேவை...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:20

சிவகங்கை : கடந்த 10 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், சிவகங்கை மாவட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஜூனில் துவங்க உள்ள தென்மேற்கு பருவமழை நீரை விரயம் ஆக்காமல் முறையாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அலுவலகம், வீடுகள் தோறும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை புத்துயிர் பெற செய்யவேண்டும்.தமிழகத்தில் அதிக கண்மாய்கள் உள்ள மாவட்டங்களில் 2 வது இடத்தில் சிவகங்கை உள்ளது. வானம் பார்த்த பூமியான இங்கு பருவ மழை காலத்தில் பெய்யும் மழை நீரை வைத்து விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.



நல்ல மழைக்காலங்களில் கண்மாய்களில் தேங்கிய மழை நீரை வைத்து பாசன வசதி பெற்றனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழை இன்றி கண்மாய்கள் வறண்டு, கருவேல் முட்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. மணல் கொள்ளையால் வைகை, உப்பாறு, மணிமுத்தாறு போன்ற ஆறுகளில் ஊற்று நீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.நிலத்தடி நீர்மட்டம் பாதிப்புஇதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் 250 முதல் 350 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. கடும் வறட்சியால் காளையார்கோவில், இளையான்குடி, திருப்புத்துார், கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. காவிரி, வைகை கூட்டு குடிநீர் திட்டங்களில் கிடைக்கும் நீரை முறையாக வினியோகம் செய்யாததால், நகரங்களிலும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.



இவற்றிற்கெல்லாம் முக்கிய பிரச்னையாக கருதப்படுவது மழை நீரை முறையாக சேமிக்காமலும், ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்காமல் விட்டதும் தான்.மழை நீர் சேமிப்பு அவசியம்கோடை மழை தான் சிவகங்கையை கைவிட்டு விட்டது. அடுத்து ஜூனில் வரவுள்ள தென்மேற்கு பருவ மழை நீரையாவது சேகரிப்பதில் மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களும் அக்கறை செலுத்த வேண்டும். அரசு சார்பில் கண்மாய் மற்றும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்த வேண்டும். வீடுகள், அலுவலகங்களில் ஏற்கனவே உள்ள மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டும்.



மணல் கொள்ளையை தடுத்து, ஆற்றில் ஊற்று நீர் சேகரமாக வழிவகை செய்ய வேண்டும். இது போன்ற செயலில் மாவட்ட நிர்வாகமும், மக்களும் ஈடுபட்டால் மட்டுமே வருங்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காமலும், கண்மாய், கிணறுகளில் ஊற்று நீர் பெருகி குடிநீர் பஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் நீர்நிலைகளை பாதுகாக்கவும், மழை நீர் சேகரிப்பிற்கு புத்துயிர் தருவதிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X