| ஆதி காமாட்சி அம்மனுக்கு மகா கும்பாபிஷேக விழா Dinamalar
ஆதி காமாட்சி அம்மனுக்கு மகா கும்பாபிஷேக விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:20

காரமடை : காரமடை கன்னார்பாளையத்தில், 300 ஆண்டு பழமை வாய்த ஆதி காமாட்சியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது.



கன்னார்பாளையம் ஸ்ரீ ஆதி காமாட்சிம்மன் கோவில் புதிபிக்கப்பட்டு அழகிய கருவறை சிற்ப சாஸ்திர முறைப்படி பிம்பங்கள் வடிவமைத்து, ஸ்ரீ கணபதி, ஸ்ரீ சக்திமுருகன் ,ஸ்ரீ காமாட்சியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.நேற்று காலை ஸ்ரீமகா கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தீர்த்த குடம் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், மாலை விக்னேஸ்வர பூஜை,புண்யாகவசனம் ,வாஸ்து சாந்தி ,பூமி பூஜை முதல் காலவேள்வி ஆகியவை நடந்தது.நேற்று 16.05.2019 அதிகாலை முதல் திருப்பள்ளி எழுச்சி ,மங்கள இசை, துவார பூஜை இரண்டாம் கால வேள்வி, பூர்ணாஹுதி . யாத்திர தானத்தை தொடர்ந்து மூல கோபுர கலசத்துக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. சிரவை ஆதினம் குமர குருபரர், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள் ஆகியோர் பங்கேற்றனர்.தியாகராஜ சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் மஹா கும்பாபிஷே கதத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X