படிக்கட்டு கூரை பணி ஜூன் மாதம் முடியும் | சென்னை செய்திகள் | Dinamalar
படிக்கட்டு கூரை பணி ஜூன் மாதம் முடியும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:22

சென்னை: 'எழும்பூர் ரயில் நிலையத்தில், பிளாட்பார படிக்கட்டுக்கு மேற்கூரை, ஜூன் மாதத்திற்குள் அமைக்கப்படும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், 10 மற்றும் 11 புறநகர் மின்சார ரயில் பிளாட்பாரத்தில் இருந்து, நடை மேம்பாலத்துக்கு செல்வதற்கான படிக்கட்டுக்கு, மேற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால், கொளுத்தும் வெயிலில், பயணியர் மிகவும் சிரமப்படுகின்றனர் என, 10ம் தேதி, நம் நாளிதழ், படத்துடன் செய்தி வெளியிட்டது.பிளாட்பார படிக்கட்டு கூரை பணி தாமதம் ஏன் என்பதற்கு, தெற்கு ரயில்வே, சமீபத்தில் விளக்கம் அளித்தது.எழும்பூர் புறநகர் மின்சார ரயில் நிலையத்தின், 10 மற்றும் 11 பிளாட்பாரத்தில், நடைமேம்பால இணைப்பு படிக்கட்டு, விரிவாக்கப் பணி நடக்கிறது. பிளாட்பாரத்தின், இரண்டு பக்கமும், இரண்டு மீட்டர் அகலம் உள்ள, இரண்டு படிக்கட்டுகளும், இவைகளுக்கு இடையே, நகரும் படிக்கட்டு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.



இப்பணியில், ஒரு பக்க, படிக்கட்டு பணி முடிந்து, பயணியர் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மற்றொரு பக்க, படிக்கட்டு கட்டுமான பணி நடக்கிறது.இரு பக்க படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளுக்கு, ஒரே மேற்கூரை அமைக்கப்பட உள்ளது. கட்டுமான பாக்கி பணிகள் முடிந்ததும், ஜூன் மாத முதல் வாரத்துக்குள், மேற்கூரை அமைக்கப்படும்.இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X