நாட்டரசன்கோட்டை வடமஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:22

சிவகங்கை : சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் சீறி வந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை காளைகள் முட்டியதில் 8 பேர் காயமடைந்தனர்.



நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 13 காளைகள் பங்கேற்றன. ஒவ்வொரு காளையையும் வடக்கயிற்றில் கட்டி, அதை அடக்கும் வீரர்களுக்கு பரிசு வழங்குவர். இதற்காக காளைக்கு 15 நிமிடம் வீதம் நேரம் ஒதுக்குவர். ஒரு காளையை அடக்க மாடுபிடி வீரர்கள் 9 பேர் களத்தில் இறங்குவர். குறிப்பிட்ட நேரத்திற்க்குள் காளையை அடக்கினால், வீரர்களுக்கு பரிசு வழங்கப்படும்.



பிடிபடாத காளையின் உரிமையாளருக்கும் பரிசு உண்டு. நேற்று காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் திருப்புவனம் புதுாரை சேர்ந்த சுபாஷ் 25, ரமேஷ் 22, விக்கீஸ்வரன் 18, பொன்னாம்பட்டியை சேர்ந்த ரமேஷ் 25, உட்பட 8 பேர் காயமடைந்தனர்.. இவர்களுக்கு மறவமங்கலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பிரசன்னா, விக்னேஷ் சிகிச்சை அளித்தனர். பலத்த காயமடைந்த பொன்னாம்பட்டி ரமேஷ் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X