சரக்கு லாரி மாயம் ரூ.11 லட்சம் இழப்பீடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:23

சென்னை:
சரக்கு லாரி மாயமான விவகாரத்தில், காப்பீடு நிறுவனம், பாலிசிதாரருக்கு, 11 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை, கொருக்குப்பேட்டை, திருவள்ளுவர் நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 50. இவர், 14.73 லட்சம் ரூபாய் மதிப்பில், சரக்கு லாரி வைத்திருந்தார்.தனியார் காப்பீடு நிறுவனத்தில், அதற்கு பாலிசியும் உள்ளது. லாரியில் கோளாறு ஏற்பட்டதால், மஞ்சம்பாக்கத்தில் உள்ள, 'ஒர்க்ஸ் ஷாப்'பில் சரி செய்ய கொடுத்தார். அப்போது, லாரி மாயமானது. போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.உரிய இழப்பீடு வழங்க, காப்பீடு நிறுவனத்துக்கு, ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், இழப்பீடு கிடைக்கவில்லை.லாரிக்கான தொகை, 14.73 லட்சம் ரூபாயுடன், சேவை குறைபாட்டுக்கு, 2 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு, 2 லட்சம் ரூபாய் வழங்க, சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். 2016ல் இருந்து, வழக்கு நடந்து வந்தது.விசாரணையில், 'தாமதமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோரிக்கையில் நன்பகத்தன்மை இல்லை, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, காப்பீடு நிறுவனம் தெரிவித்தது.வழக்கில் நீதிபதி லட்சுமிகாந்தம், நீதித்துறை உறுப்பினர், ஜெயந்தி பிறப்பித்த உத்தரவு:காப்பீடு நிறுவனத்தின் சேவையில், குறைபாடு உள்ளது. மனுதாரருக்கு, லாரிக்கு, 11 லட்சம் ரூபாய் திரும்ப வழங்குவதுடன், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, 5,000 ரூபாய் வழக்கு செலவு என, மொத்தம், 11 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய், நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவிடப்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X