| சென்னை மெட்ரோவில் 3.81 கோடி பேர் பயணம் Dinamalar
சென்னை மெட்ரோவில் 3.81 கோடி பேர் பயணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:25

சென்னை:மெட்ரோ ரயில் போக்கு வரத்து துவங்கப்பட்டதில் இருந்து, 14ம் தேதி வரை, 3.81 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.மெட்ரோ ரயில் திட்டத்தில், சென்னையில், விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை - சென்ட்ரல் இடையே, 45 கி.மீ., பாதை அமைக்கப்பட்டு உள்ளது.இப்பாதை கட்டுமானத்தில், முதல் கட்டமாக, கோயம்பேடு - ஆலந்துார் இடையே, 2015 ஜூன், 29ம் தேதியில் இருந்து, போக்குவரத்து துவங்கப்பட்டது.பல கட்டங்களாக பாதை பணி முடிக்கப்பட்டு, தற்போது, விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை - சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது முதல், 14ம் தேதி வரை, பயணம் செய்த பயணியர் குறித்த தகவலை, மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டது.மெட்ரோ ரயிலில், 14ம் தேதி வரை, 3.81 கோடி பேர் பயணம் செய்து உள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X