| 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு Dinamalar
20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:26

சென்னை:
நீர் சுத்திகரிப்பு இயந்திர கோளாறு பிரச்னையில், 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திருவான்மியூரைச் சேர்ந்த வேணுகோபால், இவர், 2017ல், 10,500 ரூபாய்க்கு, 'அக்வா நோவோ' நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கினார்.பத்து நாட்களில் கோளாறு ஏற்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்டும், பயன்படுத்த முடியவில்லை. புதிய இயந்திரம் வழங்க வேண்டும். இல்லையேல், செலுத்திய தொகையுடன், இழப்பீடாக, 25,000 ரூபாய் வழங்க வேண்டும் என, சென்னை, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கில், நீதிபதி லட்சுமிகாந்தம், நீதித்துறை உறுப்பினர் ஜெயந்தி பிறப்பித்த உத்தரவு:விற்பனை நிறுவனம் உரிய சேவை வழங்கவில்லை. மனுதாரருக்கு புதிய இயந்திரம் வழங்க வேண்டும். இல்லையேல், இயந்திரத்துக்கான, 10,500 ரூபாய் திரும்ப வழங்குவதுடன், 5,000 ரூபாய் இழப்பீடு, 5,000 ரூபாய் வழக்கு செலவு என, மொத்தம், 20,500 ரூபாய் மனுதாரருக்கு நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X