வேளச்சேரி:வேளச்சேரியில், 30 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு ரேஷன் கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.அடையாறு மண்டலம், 179வது வார்டு, வேளச்சேரி, காந்தி சாலையில், இரண்டு ரேஷன் கடைகள் உள்ளன. அவை, வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தன. அதுமட்டுமல்லாமல், சேதமடைந்து காணப்பட்டன.இதனால், சொந்த கட்டடம் கட்ட, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, நியூ காலனியில் உள்ள, 800 சதுர அடி பரப்பளவு இடத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு ரேஷன் கடைகள் கட்டும் பணிகள் நடக்கின்றன.மூன்று மாதத்தில், அனைத்து பணிகளையும் முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.