| முட்புதர் சூழ்ந்த விளையாட்டு மைதானம் Dinamalar
முட்புதர் சூழ்ந்த விளையாட்டு மைதானம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:32

போடி : போடி அருகே சில்லமரத்துப்பட்டி இந்திரா காலனியில் விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர்.



போடி ஒன்றியம் சில்லமரத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா காலனி. 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதி இளைஞர்கள் உடற்பயிற்சி, விளையாட தேவையான உபகரணங்களுடன் ரூ. பல லட்சம் செலவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. சுற்றுச்சுவர் வசதி இன்றி, ஊராட்சி நிர்வாகம் முறையான பராமரிப்பு செய்யாததால் முட்புதர்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, விளையாட்டு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன. இதனால் உரிய உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையில் பலரும் சிரமம் அடைகின்றனர். மைதானத்தை உரிய முறையில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X