பள்ளிகள் நல்ல நிலையில் இருக்கணும்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:36

திருப்பூர் : இன்னும், 13 நாளில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கு பள்ளிகளை தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.



லோக்சபா தேர்தல் அறிவிப்பால், நடப்பாண்டு ஏப்ரல், 12ம் தேதியுடன் கல்வியாண்டு முடிக்கப்பட்டது. அவசர கதியில் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், கூடுதல் கோடை விடுமுறை கிடைத்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்; ஒன்றரை மாத விடுமுறைக்கு பின், பள்ளிகள் அடுத்த மாதம், 3ம் தேதி திறக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கு, 13 நாட்கள் மட்டுமே உள்ளதால், இரு வாரங்களுக்குள் பள்ளிகளை தயார்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது;பள்ளி திறப்புக்கு முன், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த வேண்டும். வகுப்பறை கதவு, ஜன்னல், மேஜை, இருக்கையில் உள்ள பழுதை சரிசெய்ய வேண்டும். இடிந்து விழும் நிலையில் அல்லது பராமரிப்பின்றி கட்டங்கள் இருந்தால், உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் அவற்றை அகற்ற வேண்டும்; அந்த இடத்துக்கு யாரும் செல்லாத வகையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.



குடிநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தி, உடைந்துள்ள குழாய்களை சரிசெய்ய வேண்டும். விளையாட்டு மைதானம், ஆய்வகம், நுாலகம், கணிணி அறை பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள மரங்கள், மழை, காற்றுக்கு சாய்ந்து விழும் நிலையில் இருந்தால், பாதுகாப்பு கருதி அவற்றின் கிளைகளை அகற்ற வேண்டும். பள்ளி வளாகம், வகுப்பறை, மேற்கூரையில் மழைநீர் தேங்கியிருக்காமல், பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



இந்த சுற்றறிக்கையை, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட கல்வித்துறை அனுப்பி வைத்துள்ளது. இன்று முதல், இவ்வார இறுதிக்குள் இப்பணிகளை முடித்து, நடப்பு கல்வியாண்டுக்கு பள்ளியை தயார்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



ஒத்துழைப்பு அவசியம்:


பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது;கடந்தாண்டு மாநிலத்தில் உள்ள, 519 அரசு பள்ளிகளுக்கு, 58 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை, நன்கொடையாளர்கள் மற்றும் சமூக அக்கறையுள்ளவர்கள் செய்துள்ளனர். நடப்பாண்டில் அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும் சமூக அக்கறையுள்ள நிறுவனங்களுக்கு, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அவர்கள் பள்ளிக்கு செய்யும் உதவிக்கு, முழு அனுமதி வழங்குவது அவசியம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X