| வேளாண் துறையினர் வேகம் Dinamalar
வேளாண் துறையினர் வேகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:38

பல்லடம் : 'பல்லடம் வட்டாரத்தில், ஒருங்கிணைந்த மண் மாதிரி சேகரிப்பு பணி துவங்கியுள்ளது' என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.



2018--19ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள, தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தில், மதிப்பீடு, தரக்கட்டுப்பாடு மற்றும் விளை நிலங்களில் உர தேவையை போதுமான அளவு கண்டறிந்து பயன்படுத்துவது தொடர்பாக, விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட உள்ளது. அதற்காக, மண் மாதிரி சேகரிக்கும் பணி, பல்லடம் ஒன்றியம் சித்தம்பலம் பாப்பம்மாள் தோட்டத்தில் துவங்கியது.



வட்டார வேளாண் உதவி இயக்குனர் பாமாமணி தலைமை வகித்தார். மாவட்ட மண் மாதிரி ஆய்வுக்கூட வேளாண்மை அலுவலர் திவ்யா, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில், மண் மாதிரி சேகரித்தல் மற்றும் அதன் பயன்கள் குறித்து, விவசாயிகளுக்கு விரிவான பயிற்சியளிக்கப்பட்டது. வட்டார வேளாண் அலுவலர் கவிதா, துணை வேளாண் அலுவலர் விஜயலட்சுமி, உதவி அலுவலர்கள், 'ஆத்மா' திட்ட தொழில்நுட்ப அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X