| ரெகுலர் ஆணையர் இல்லாததால் திட்ட பணிகள் மெத்தனம் Dinamalar
ரெகுலர் ஆணையர் இல்லாததால் திட்ட பணிகள் மெத்தனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:39

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகராட்சியில், ரெகுலர் ஆணையர் இல்லாததால், திட்ட பணிகள் மெத்தனமாக நடைபெறுவதாக, புகார் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக, மதுரையைச் சேர்ந்த சர்தார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது, பல முறைகேடு புகார்கள் எழுந்தன.ஊட்டியில் பணியாற்றியபோது, ஒப்பந்த ஊழியர்களை நியமித்ததில் முறைகேடு என, லஞ்ச ஒழிப்பு போலீசார், இவர் மீது வழக்கு பதிந்தனர்.இதையடுத்து, கடந்தாண்டு, இவரது வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார், 'ரெய்டு' நடத்தியதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.இதன் எதிரொலியாக, கடந்தாண்டு டிசம்பரில், இவரை பணியிடை நீக்கம் செய்து, தமிழக அரசின் நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.டிசம்பர் மாதம் முதல், நகராட்சி பொறியாளரான மகேந்திரனுக்கு, ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.பொறியாளரே, ஆணையராக கூடுதல் பொறுப்பில் இருப்பதால், நகராட்சியின் முக்கிய பணிகள் மெத்தனமாக நடைபெறுவதாக புகார் உள்ளது.ஏற்கனவே, நகராட்சியின் செயல்பாடுகள் பின்னடைவாக இருக்கும் சூழலில், ரெகுலர் ஆணையர் இல்லாமல் இருப்பது, மேலும் பின்னடைவை தரும்.இந்திய அளவில் துாய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பில், காஞ்சிபுரம், 333வது இடத்தில் உள்ளது.நகராட்சியில் கட்டட அனுமதி, இறப்பு உள்ளிட்ட சான்று பெற பொதுமக்கள் வழங்கும் ஆவணங்களை, அதிகாரிகள் தொலைப்பதாகவும் புகார் எழுகிறது.எனவே, ரெகுலர் ஆணையரை உடனடியாக நியமிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் நகரவாசிகள், கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X