மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த, பையனுார், எட்டீஸ்வரர் கோவிலில், வளாகத்தைச் சுற்றிலும் முட்புதர் சூழ்ந்தது; குளத்தில் கொடிகள் படர்ந்திருந்தன.இந்நிலையில், மாதத்தில், மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை, கோவில் உழவாரப்பணி மேற்கொள்ளும், சென்னை, திருமுல்லைவாயல், மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவார பக்தர்கள், நேற்று, இங்கு முகாமிட்டனர்.வளாக முட்புதர், குளத்து கொடிகளை அகற்றி துாய்மைப்படுத்தி, வழிபாட்டு பொருட்களை சுத்தப்படுத்தினர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலிலும், இந்து முன்னணி சார்பில், நேற்று, உழவார பணி நடந்தது.ராஜ கோபுர அடிப்பகுதி, குளத்தின் படிக்கட்டு பகுதிகளில் இருந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன.