கருட சேவையில் காஞ்சி வரதர் உலா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:45

காஞ்சிபுரம்,:

வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று காலை, கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், வெள்ளிக்கிழமை துவங்கியது. இவ்விழாவின் முக்கிய உற்சவமான கருடசேவை, நேற்று அதிகாலை, 4:57 மணிக்கு நடைபெற்றது.பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி, சன்னிதி தெரு, விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, தாயார்குளம் தெரு வழியாக பிள்ளையார்பாளையம் சென்றார்.அங்கிருந்து கிருஷ்ணன் தெரு, புத்தேரி தெரு வழியாக கச்சபேஸ்வரர் கோவில் முன் எழுந்தருளினார். அங்கு, குடை மாற்றிய பின், பெருமாள் புறப்பட்டு, கங்கை கொண்ட மண்டபம் ராஜ வீதிகளை சுற்றி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு, பெருமாளை வழிபட்டனர். மதியம், 1:15 மணிக்கு, பெருமாள், கோவிலை மீண்டும் வந்தடைந்தார்.போக்குவரத்து மாற்றம்வரதர் கருட சேவை திருவிழாவை முன்னிட்டு, கச்சபேஸ்வரர் கோவில் எதிரில், 'டவர்' அமைக்கப்பட்டு, போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சுவாமி செல்லும் வழியில், போலீசார், அறிவிப்பு செய்தபடி சென்றனர்.காஞ்சிபுரம் நகரில், அனைத்து சாலைகளிலும், மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால், வந்தவாசி, உத்திரமேரூர், தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் பஸ்கள், மாற்றுத்தடத்தில் இயக்கப்பட்டன. மதியத்திற்கு பின், வழக்கமான வழிகளில், பஸ்கள் சென்றன.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X