| செய்தி சில வரிகளில்... Dinamalar
செய்தி சில வரிகளில்...
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:48

தொழிற்சங்க மாணிக்க விழா



மாமல்லபுரம்: கல்பாக்கத்தில், அணுவாற்றல் ஊழியர் சங்கம், 1979ல் துவக்கி, 40 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதன் மாணிக்க விழா, நேற்று முன்தினம், சங்க தலைவர், தேசிய பொதுச்செயலர், சி.யு.ஜெயகுமார் தலைமையில் நடந்தது.விழா மலரை, இ.கம்யூ., மூத்த பிரமுகர் நல்லக்கண்ணு வெளியிட்டு பேசுகையில், ''நாடு சுதந்திரம் பெற, முதலில் போராடியது, தொழிற்சங்கங்களே. கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில், இப்போது, நாடு சிக்கியுள்ளது. இதையும் மீட்க, போராட வேண்டும்,'' என்றார்.



சங்கரா கல்லுாரியில் பயிற்சி




பட்டறைகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அதன் அங்கமான, ஸ்ருதி சமுதாய வானொலி மற்றும் பன்னாட்டு அமைப்பு சார்பில், இரண்டு நாட்கள் பயிற்சி பட்டறை நடந்தது. கேட்பு ஊடகம் வாயிலாக, மாணவ - மாணவியருக்கு கற்றல், கற்பித்தல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.



அமைச்சருக்கு எதிராக மனு



காஞ்சிபுரம்: நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியதற்கு, அமைச்சர், ராஜேந்திர பாலாஜி, 'கமல் நாக்கை அறுக்க வேண்டும்' என, கருத்து தெரிவித்தார்.மக்களிடம், வன்முறையை துாண்டும் விதமாக பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மக்கள் நீதி மையம் கட்சியினர், காஞ்சிபுரம், டி.எஸ்.பி.,யிடம், நேற்று முன்தினம், புகார் மனு அளித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X