கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை சப்ளை 26 டன்: மாதம் 1 கிலோ விவசாயிகளுக்கு கிடைக்கும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:51

காஞ்சிபுரம்:கோடை காலத்தில், கால்நடைகளுக்கு இயற்கை தீவனம் பற்றாக்குறை ஏற்படும். இதனால், மாடுகளுக்கு ஏற்படும் சத்து குறைபாட்டை தடுப்பதற்காக, அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும், தாது உப்பு கலவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டத்திற்கு, 26 டன் தாது உப்பு வந்துள்ளது.




காஞ்சிபுரம் மாவட்டத்தில், 4.46 லட்சம் மாடுகள் உள்ளன. இதில், பசுமாடுகள், 3 லட்சத்து, 8,605; எருமை மாடுகள், 59 ஆயிரத்து, 895; மற்றவை காளை மாடுகள் என, கணக்கிடப்பட்டு உள்ளன.பால் உற்பத்திகடந்த ஆண்டு, போதிய பருவ மழை பெய்யாததால், கோடை காலத்திற்கு முன்பே நீர் நிலைகள் வற்றி வறண்டு விட்டன. பசும் புல் கிடைப்பது அரிதாகி விட்டது.உலர் தீவனமான வைக்கோல், கால்நடைகளுக்கு பெரும்பாலும் வழங்கப்படுகிறது. இவற்றை உண்பதால், கறவை மாடுகள் பால் உற்பத்தி குறையும். மேலும், அதற்கு தேவையான ஊட்ட சத்தும் கிடைக்காது. இதற்கு மாறாக, கால்நடைகளுக்கு ஊட்டசத்துள்ள தாது உப்பு கலவை வழங்கப்படுகிறது.




இது குறித்துல மாவட்ட கால்நடைத் துறை இணை இயக்குனர் பொறுப்பு, சி.நாராயணன் கூறியதாவது:மனிதர்களுக்கு சத்து குறைவாகும் போது, ஊட்டச்சத்து வழங்கப்படுவது போல, கால்நடைகளுக்கும், சத்து நிறைந்த தாது உப்பு கலவை வழங்கப்படுகிறது. இலவசம்ஒரு நாளைக்கு, 30 கிராம் அளவு தாது உப்பு தண்ணீருடன் கலந்து கொடுக்கலாம் அல்லது தவிடு போன்றவையுடன் கலந்தும் கொடுக்கலாம்.இதனால், சினை பிடிக்காத மாடுகள் விரைவில் சினை பிடிக்கும். உடல் வளர்ச்சி அடையும். பால் மாடுகள் அதிகம் பால் கரக்கும். ஒரு மாதத்திற்கு ஒரு பாக்கெட், இலவசமாக அந்தந்த கால்நடை மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த நான்கு கால்நடை கோட்டங்களுக்கும் பிரித்து, தாது உப்பு கலவை வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில், கால்நடை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.இந்த தாது உப்பு கலவையில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளதாக, கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.




கால்நடைகளை தாக்கும், 'வெப்ப அலர்ச்சி'கால்நடைகளை அதிகாலையில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வெயிலுக்கு முன் கொட்டகையில் அடைத்து விட வேண்டும். தேவைப்படும் போது தண்ணீர் கொடுக்க வேண்டும். மர நிழல் அல்லது கொட்டகையில் கால்நடைகளை கட்டி வைத்து பராமரிக்க வேண்டும்.வெயில் அதிகம் இருப்பதால், கால்நடைகள் மீது தண்ணீர் அடிக்கடி தெளிக்க வேண்டும். இதனால், சூடு குறையும். செய்யாவிடில், வெப்ப அலர்ச்சி நோய் ஏற்படும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X