ஓரிக்கையில் குடிநீர் தட்டுப்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:57

காஞ்சிபுரம்: ஓரிக்கையை சுற்றியுள்ள பகுதிகளில், வசிப்போரின் வீடுகளில் தண்ணீர் வராததால், பொதுக் குழாயை பலரும் நாடி வருகின்றனர்.கோடைக் காலம் துவங்கியதை தொடர்ந்து, அனைத்து இடங்களிலும், குடிநீர் பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது.காஞ்சிபுரம் நகராட்சியில், வீடுகளுக்கு அனுப்பப்பட்ட குடிநீரும், இப்போது சரிவர அனுப்புவதில்லை. இதனால், காஞ்சிபுரம் நகராட்சியில், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், குடிநீர் பிரச்னை தலைதுாக்கியுள்ளது.குடிநீர் பிரச்னை அதிகரித்ததால், ஓரிக்கையில் உள்ள பொது குடிநீர் குழாயில், சுற்றியுள்ள பகுதிவாசிகள் தண்ணீர் பிடிக்க, அதிகளவில் குவிகின்றனர். அப்பாவு நகர், காந்தி நகர் குடியிருப்புவாசிகள், இந்த குடிநீர் குழாயை நாடி வருகின்றனர்.இது குறித்து, அப்பாவு நகரைச் சேர்ந்த, ஜே.சத்யா கூறியதாவது:எங்கள் பகுதியில், மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வந்தது. காலை முதல் மதியம் வரை தண்ணீர் வந்ததால், நாங்கள் சிரமமின்றி இருந்தோம்.ஆனால், ஒரு வாரமாக தண்ணீர் வரவில்லை. அன்றாட வீட்டு உபயோகத்திற்கு கூட தண்ணீர் இல்லை.பாலாற்றிலிருந்து தண்ணீர் வழங்கும் மோட்டார்கள் இயங்கவில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குடிநீர் வழங்க, நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X