| நீர் கசிவால் பாதிப்பு Dinamalar
நீர் கசிவால் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
00:59

சீரமைக்கப்படுமாஆண்டிபட்டி - -வைகை ரோடு முத்துகிருஷ்ணாபுரம் பிரிவில் குடிநீர் குழாய் உடைந்து ரோட்டில் ஏற்படும் நீர் கசிவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரோடு சேதம் அடையும் முன் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வி.குமார், சக்கம்பட்டி பயன்பாட்டிற்கு வருமாவாலிப்பாறையில் தாய் திட்டத்தின் கீழ் ரூ. 16 லட்சத்தில் வைகை ஆற்றில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.



பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி. பாண்டியன், வாலிப்பாறை.பயணிகள் பாதிப்புஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளியேறும் பகுதியில் தரைதளம் சேதம் அடைந்து மேடு பள்ளங்களாக உள்ளது. இரவில் வரும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-டி.மூர்த்தி, ஆண்டிபட்டிஇணைப்பு ரோடு சேதம்புள்ளிமான்கோம்பை ரோட்டில் இருந்து பி.தர்மத்துப்பட்டி செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது. மழைகாலத்தில் நீர் தேங்குவதால் ஏற்படும் சகதியால் பாதிப்பு அதிகமாகிறது. ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.முரளிதரன், தர்மத்துப்பட்டி*வைகை அணையில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலம் சேதம் அடைந்துள்ளது.



பாலத்தின் இணைப்பு பகுதிகளில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்களை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.அழகர்சாமி, வைகை அணை -------------------------சுற்றுச்சுவர் தேவைதும்மக்குண்டு அரசு உயர்நிலை பள்ளியில் சுற்றுச்சுவர் வசதியில்லாததால் கால்நடைகள் பள்ளி வளாகத்தில் சுதந்திரமாக வந்து செல்கிறது. இதனால் மாணவர்கள் படிப்புதிறன் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர்.முருகன், தும்மக்குண்டு,

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X