திருநங்கை தொல்லை தாங்க முடியலை; பணம், மொபைல்போன் பறிப்பதால் மக்கள் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:00

கோவை : கோவையில், நாளுக்கு நாள் திருநங்கை தொல்லை அதிகரித்து வருகிறது; பணம் கேட்பது மட்டுமின்றி, மொபைல்போன்களை பறிக்கும் செயல்களிலும் ஈடுபடுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.



கோவையில், கடந்த சில ஆண்டுகளாக திருநங்கைகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வெவ்வேறு பகுதிகளில் கூட்டமாக வசிக்கின்றனர். இவர்களில் சிலர் தொழிற்சாலைகள், சமையல் கலைஞர்கள் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சிலர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில், பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.



சிட்ரா, துடியலுார் பகுதிகளில் ரோட்டில் கூட்டம், கூட்டமாக நிற்கும் திருநங்கைகள், பொதுமக்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். இச்செயல் எல்லை மீறி, கல்லுாரி மாணவர்கள், பெண்களிடம் பணம், மொபைல்போன் பறிக்கும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.சில நாட்களுக்கு முன், ஒரு பெண் பேசிய 'ஆடியோ', சமூக வலைதளங்களில் வைரலானது. அவிநாசி ரோடு, நவ இந்தியா சிக்னல் அருகே, ரோட்டின் ஓரத்தில் காரை நிறுத்தியிருந்த நேரத்தில், அங்கு வந்த இரண்டு திருநங்கைகள் பணம் கேட்டு நச்சரித்துள்ளனர்.



பணம் தர மறுத்தபோது, 10 ஆயிரம் ரூபாய் இருந்த பர்ஸ் மற்றும் மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் திருநங்கைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 'ஆடியோ'வில் அப்பெண் கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோல், பீளமேடு பகுதியிலும், ரோட்டில் நடந்து சென்ற கல்லுாரி மாணவரிடம் பணம், மொபைல்போன் பறிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளிலும் திருநங்கைகள் 'கைவரிசை' தொடர்ந்து நடந்து வருகிறது.



பொதுமக்கள் கூறுகையில், 'கவுண்டம்பாளையம், துடியலுார் பகுதிகளில் இரவு நேரங்களில் ரோட்டில் செல்லவே பயமாக உள்ளது. வாகனத்தில் சென்றாலும் தடுத்து நிறுத்தி, பணம் கேட்கின்றனர். பணம் தரமறுத்தால், அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுகின்றனர்' என்றனர்.



போலீசாரிடம் கேட்ட போது, 'தொடர்ந்து புகார் வந்ததால், திருநங்கை சங்கத்தினரை அழைத்து, உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அத்துமீறும் செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டது. குறிப்பிட்ட இடங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது,' என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X