| மேம்பாலம் பணி தொய்வு நிறுவனத்துக்கு நோட்டீஸ் Dinamalar
மேம்பாலம் பணி தொய்வு நிறுவனத்துக்கு நோட்டீஸ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:00

கோவை : உக்கடம் - ஆத்துப்பாலம் வரையிலான மேம்பாலப் பணியில், தொய்வு ஏற்பட்டதால், ஒப்பந்த நிறுவனத்துக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் வழங்கியது.உக்கடம் - ஆத்துப்பாலம் வரை, 1.97 கி.மீ., துாரத்துக்கு ரூ.121.82 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி, கடந்தாண்டு ஏப்ரலில் துவக்கப்பட்டது. கரும்புக்கடை முதல் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் முன்பு வரை துாண்கள் கட்டப்பட்டு உள்ளன. கடந்த மாத இறுதிக்குள் 'டெக்' அமைக்கும் வேலை துவங்கும் என, நெடுஞ்சாலைத்துறை கூறியிருந்தது. போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என கருதி, வாகனங்களை அனுமதிக்க வேண்டாமென, ஒப்பந்த நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏற்கவில்லை.சமீபகாலமாக, மேம்பாலம் பணி தொய்வாக நடக்கிறது. குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே பணிபுரிகின்றனர். அதனால், ஒப்பந்த நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் வழங்கியுள்ளதாக, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.'டெக்' அமைக்கும் பணியை விரைந்து முடித்தால், உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி, வாகனத்தில் வருவோர், தற்போது சந்திக்கும் சிரமங்கள் குறையும். மீண்டும் இரு வழிப்பாதையாக போக்குவரத்தை அனுமதிக்கலாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X