18ம் நாளில் விழுந்தான் துரியோதனன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:01

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி விழாவில், காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருத்தணி பழைய திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, 18ம் நாளில், காலை, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நடந்தது. நிகழ்ச்சியில், துரியோதனன் படுகளம் பகுதிக்கு, இழுத்து வந்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின், துரியோதனன் ரத்தத்தால் திரவுபதியம்மன் கூந்தல் முடிக்கப்பட்டது.அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். சிலர், ஆடு, கோழி பலியிட்டும் வழிபட்டனர்.காலை, 11:50 மணிக்கு, அக்னி குண்டத்தில் தீ மூட்டும் நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு, பூ கரகம் ஊர்வலத்துடன், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீமிதித்தனர்.பின், உற்சவர் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி, டி.எஸ்.பி., சேகர் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இன்று காலை, 11:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த, கல்வாய் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று காலை, 7:00 மணியிலிருந்து, காலை, 11:00 மணி வரை, துரியோதனன் படுகளம் நடைபெற்றது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X