| * போலீஸ் செய்தி Dinamalar
* போலீஸ் செய்தி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:03

பெண்ணிடம் செயின் பறிப்புமீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த, வல்லுார் மின் வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் அன்பழகன், 48. மின் வாரிய அதிகாரி. இவர், அதே வளாகத்தில் உள்ள மற்றொரு குடியிருப்பு கட்டடத்திற்கு வீடு மாற உள்ளார்.இதற்காக, நேற்று முன்தினம் மாலை, இவரது மனைவி சசிகலா, 43, அந்த வீட்டினை பார்வையிட, தற்போது உள்ள வீட்டில் இருந்து சென்று கொண்டிருந்தார்.மின் வாரிய குடியிருப்பு வளாகங்கள் வழியாக சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர், சசிகலாவின் கழுத்தில் இருந்த, 10 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பினர்.இது தொடர்பாக, சசிகலா கொடுத்த புகாரின்படி, மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து, செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


மயங்கிய காவலாளி பலிகும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநிலம், சத்தியவேடு அருகே, அகராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகள் கேசவன், 57. கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் காற்றாலை தொழிற்சாலையில், காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், நேற்று அதிகாலை பணியில் இருந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.இளம்பெண் தற்கொலைகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, சின்னஓபுளாபுரம் கிராமத்தில் வசித்தவர் குமரேசன் மகள் ஆர்த்தி, 21; பொறியியல் பட்டதாரி. நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இறந்தார்.வயிற்று வலியால் மகள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில், அவரது தந்தை குமரேசன் தெரிவித்தார்.
வாலிபர் தற்கொலைமணவாளநகர்: திருநெல்வேலி மாவட்டம், மாயமன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டிராஜ் மகன் தங்கபாண்டி, 21. இவர், மணவாளநகர் பகுதியில் தங்கி, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மண்ணுார் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், 17ம் தேதி, வீட்டின் உரிமையாளர், தங்கபாண்டி வீட்டின் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, அம்பத்துாரில் பணி செய்து வரும் அவரது சகோதரர் மாரி சுப்ரமணியத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, மாரி சுப்ரமணியம், தன் தந்தைக்கு தகவல் அளித்துள்ளார்.தகவல் அறிந்த மணவாளநகர் போலீசார் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, குட்டிராஜ் அளித்த புகாரின்படி, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாலிபர் தற்கொலைமப்பேடு: மப்பேடு அடுத்த, சத்தரை கிராமத்தைச் சேர்ந்த மோகன் மகன் விஜயகுமார், 31. இவருக்கு, சாரதா, 29, என்ற மனைவியும், ஷிவானி, 4, நிஷா, 2, என, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.சில மாதங்களாக, கடும் வயிற்று வலியால், விஜயகுமார் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், 15ம் தேதி, வயிற்று வலி அதிகமாகவே, அருகில் உள்ள சவுக்கு தோப்பில் பூச்சிக் கொல்லி மருந்து குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.தகவலறிந்த இவரது தந்தை மோகன், மகனை மீட்டு, மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் இறந்தார்.வாலிபர் மாயம்மேல்நல்லாத்துார்: மணவாளநகர் அடுத்த, மேல்நல்லாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகன் புகழேந்தி, 20. இவர், 16ம் தேதி, காக்களூரில் உள்ள தொழிற்பேட்டையில், நேர்முக தேர்விற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுஉள்ளார்.பின், வீடு திரும்பாததால், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, இவரது தந்தை சரவணன் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கார் மோதி ஒருவர் பலிமாமல்லபுரம்: கூவத்துார் அடுத்த, முகையூர் காலனியைச் சேர்ந்த கோபால் மகன் ஏழுமலை, 52. நேற்று முன்தினம், இரவு, 8:45 மணிக்கு, இப்பகுதி நண்பர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்க, கிழக்கு கடற்கரை சாலையில், நடந்து சென்றார். சென்னையிலிருந்து, புதுச்சேரி சென்ற, எர்டிகா கார், அவர் மீது மோதி, அங்கேயே, ஏழுமலை இறந்தார். கூவத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயிலில் அடிபட்டு வாலிபர் பலிசெங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ்குமார், 24. இவர், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மொபைல் போனில் பேசியபடி, தண்டவாளத்தை கடந்தார். அப்போது, அவ்வழியாக சென்ற, விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தார்.தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.கொள்ளையில் ஒருவன் கைதுசெங்கல்பட்டு: மதுரையில், நகைகள் கண்காட்சியை முடித்து, சென்னையைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள், ஏப்., 28ம் தேதி, சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். செங்கல்பட்டு அடுத்த, பரனுார் சுங்கச்சாவடி அருகே, இந்த காரை வழிமறித்த மர்ம நபர்கள், 12 கோடி ரூபாய் மதிப்பு நகை, 8 லட்சம் ரூபாயை, நகைக்கடை ஊழியர்களிடமிருந்து பறித்து சென்றனர்.விசாரணைக்கு பின், இக்கொள்ளை வழக்கில், ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 7.6 கோடி ரூபாய் நகை, இனோவா கார், 'யமஹா' இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், கொள்ளையர்களின், 'இனோவா' காரை ஓட்டி வந்த, சென்னை மணலியைச் சேர்ந்த சதீஷ்குமார், 29, என்பவனை, போலீசார், நேற்று கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X