| நம்பிக்கை தரும் சின்ன வெங்காயம் ;விலை கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம் Dinamalar
நம்பிக்கை தரும் சின்ன வெங்காயம் ;விலை கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:03

தொண்டாமுத்துார் : வைகாசி பட்டத்தை எதிர்பார்த்து, தொண்டாமுத்துார் வட்டாரத்தில், அதிகமான விவசாயிகள், சின்ன வெங்காயம் நடவு செய்து வருகின்றனர்.



தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. பருவமழை சரியாக பெய்யாமல் பொய்த்து போனதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிக தண்ணீர் பாசனம் தேவைப்படும் பயிர்களுக்கு பதிலாக, குறைந்த தண்ணீரைக் கொண்டு, குறுகிய காலத்தில் லாபம் தரும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில், விவசாயிகள் கவனம் திரும்பியுள்ளது.சின்ன வெங்காய சாகுபடிக்கு பராமரிப்பு சிரமமும் குறைவு. நடவு செய்த, 70 நாளில் மகசூல் கொடுக்கிறது.ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்; ஏக்கருக்கு, 5 டன் வரை வெங்காயம் அறுவடை செய்யலாம்.



பொதுவாக, தொண்டாமுத்துார் வட்டாரத்தில், வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வது வழக்கம். கடந்த மாதம், ஒரு கிலோ சின்ன வெங்காயம், 18 ரூபாய்க்கு விற்றது. தற்போது சந்தை விலை உயர்ந்து, அதிகபட்சமாக கிலோ, 42 ரூபாய்க்கு விற்கிறது. விலை உயர்வாலும், விதை வெங்காயம் கையிருப்பாலும், வைகாசி பட்டத்துக்கான வெங்காய சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. அதனால், சின்ன வெங்காயம் நடவு செய்வதில், விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X