| போக்குவரத்து நெரிசலால் இடியாப்ப சிக்கலில் சின்னமனுார் ரவுண்டானா Dinamalar
போக்குவரத்து நெரிசலால் இடியாப்ப சிக்கலில் சின்னமனுார் ரவுண்டானா
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:03

சின்னமனுார் : சின்னமனுார் போலீசாரின் 'மவுனத்தால்' மார்க்கையன்கோட்டை பிரிவில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்படுகின்றனர்.நகராட்சியின் இதயப்பகுதியில் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா அமைந்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் இந்த இடத்தில் அரசியல் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால், அப்போதைய இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி இடமாற்றம் செய்தார். அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளும் அப்புறப்படுத்தி நகராட்சி சார்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.



அதன் பின் வந்த போலீஸ் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பயணிகள் நிழற்குடைக்கு முன்புறம் 15 அடிக்கு ஆக்கிரமிப்பு கடைகள் பெருகி விட்டன.பயணிகளை ஏற்ற அனுமதிக்கப்பட்ட இடத்தில், டவுன் பஸ்களும் மினி பஸ்களும் பஸ் ஸ்டாண்டை புறக்கணித்து இங்கேயே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. 'டிரிப் ஆட்டோ'காரர்கள் கிராமப்புறங்களுக்கு செல்பவர்களை ஏற்றுவதற்கு இங்கு வரிசை கட்டி நிற்பதால் நடக்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. ரவுண்டானா அருகே உள்ள இடையூறுகளை அகற்ற போலீசார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X