| 70 வயது ஆல மரத்துக்கு கோவையில் மறுவாழ்வு Dinamalar
70 வயது ஆல மரத்துக்கு கோவையில் மறுவாழ்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:04

கோவை : கோவை அரசு மருத்துவமனையில், விழும் நிலையில் இருந்த ஆல மரம், வேருடன் பெயர்த்தெடுக்கப்பட்டு, வேறிடத்தில் மறுநடவு செய்யப்பட்டது.



இரு நாட்களுக்கு முன், கோவையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அரசு மருத்துவமனை நுழைவாயில் அருகே உள்ள பழமையான ஆல மரம் சாயத்துவங்கியது. வேர்கள் பலமிழந்ததால், தகவல் மைய கட்டடம் மீது சாய்ந்தது. எந்நேரமும் விழும் நிலை ஏற்பட்டதால், மரத்தை வெட்ட முடிவு செய்யப்பட்டது.



ஆனால், 70 ஆண்டுக்கும் மேலான பழமையான மரத்தை வெட்டக்கூடாது; வேருடன் பெயர்த்தெடுத்து, வேறிடத்தில் மறுநடவு செய்யலாம் என, இயற்கை ஆர்வலர்கள் ஆலோசனை வழங்கினர். ஏற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், சூழல் அமைப்புடன் இணைந்து மரத்தை வேருடன் எடுத்து, வேறிடத்தில் மறுநடவு செய்ய அனுமதித்தது. இப்பணி நேற்று நடந்தது. கிளைகளை வெட்டி எடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றி, வேறிடத்துக்கு எடுத்துச் சென்று, மறுநடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X