| வாலிபர் கைது Dinamalar
வாலிபர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:12

திருவள்ளூர்: எட்டு ஆண்டுகளாக காதலித்து, திருமணத்திற்கு மறுத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் அடுத்த, தலக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகள் சத்யா, 30. இவர், எட்டு ஆண்டுகளுக்கு முன், சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்த போது, சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த செந்தில்குமார், 34, என்பவர், சத்யாவை காதலித்து வந்தார்.இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன், வெளிமாநிலத்தில் வேலைக்கு சென்ற செந்தில் குமார், சில மாதங்களுக்கு முன் வீட்டிற்கு திரும்பினார். தகவல் அறிந்ததும் சத்யா, செந்தில் குமாரை சந்தித்து, தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.அதற்கு அவர், மறுத்ததால், நேற்று முன்தினம், சத்யா, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, செந்தில்குமாரை கைது செய்து, நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X